Friday 17 January 2020

Tamil Vidukathaigal | Vidukathai in Tamil

Tamil Vidukathaigal | Vidukathai in Tamil:


தமிழ் விடுகதைகள் 

உங்கள் தோழர்களுடன் மகிழ்ந்து விளையாட 50 தமிழ் விடுகதைகள் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.


1. பச்சை மரகதப் பெட்டிக்குள் முத்துக்கள் வரிசையாய் மின்னுதம்மா! - வெண்டைக்காய்.

2. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன?
- உப்பு.

3. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன?
- அடுப்புக்கரி.

4. தண்ணீரில் மிதக்குது பத்துமாடி மாளிகை.
- கப்பல்.

5. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
- மஞ்சள்.

6. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திடுவான். 
- அரிவாள்.

7. நாலு காலில் உக்காருவான், அய்யோ பாவம் நிற்கமாட்டான்.
- நாற்காலி.

8.  பச்சைக் கிளிப்பெண்ணுக்கு உடம்பெல்லாம் முள்ளாம்.
- கள்ளிச்செடி.

9. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?
-  இதயம்.

10. அரைக்க அரைக்கக் கரைந்திடுவான். ஊருக்கே மணம் தந்திடுவான்.
- சந்தனக்கட்டை.

11. தண்ணீரில் விரிக்கும் ஓட்டைப் பாய்.
- மீன் வலை.

12.  வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது.
- விமானம்.

13. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
- நிலா

14. மழையில் பிறந்து வெயிலில் காயுது?
- காளான்

15. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?
- ரயில்

16. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள்
- தொட்டா சுருங்கி செடி.

17. சின்ன சின்ன பாப்பா குழியிலே விழுந்துட்டா அடி படாமல் எழுந்துட்டா. அது என்ன ?
- குழிப்பணியாரம்.

18. சேற்றுக்குள்ளே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம்.
- தாமரை, சூரியன்.

19.  பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?
- மழை.

20. கருப்பு மெத்தையில் வெள்ளையாய் சிரிக்கிறான் .
- தோசை.

21. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது. அது என்ன ?
- செருப்பு.

22.  வெட்ட வெட்ட வளர்ந்திடும், கவனம் இல்லை என்றால் உதிர்ந்திடும்.
- தலை முடி.

23. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி
- மயில் 

24. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல்.
- கப்பல்.

25. நெட்டையன் குட்டயணைவிட சீக்கிரம் ஓடிடுவான்.
- கடிகாரம்.

26. விட்டெறிந்த தங்கத் தட்டு வானத்துல நிற்குது.
- பௌர்ணமி நிலா 

27. மின்சாரம் இல்லாமல் விடிய விடிய எரியும் சீரியல் பல்புகள்
-  விண்மீன்கள்.

28.  தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
- ஒட்டகம்.

29. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?
- பென்சில்.

30. பாலிலே புழு நெளியுது. அது என்ன?
- பாயாசம்

31.  கல் எறிந்தால் போதும் அரண்மனையே காலியாகி விடும்.   
தேன்கூடு

32. பிறை போல இருக்கும் அண்ணன், பயிர்பச்சை அறுத்திடுவான்.  
- அரிவாள்.

33. மழை வந்தால் பூமி விரித்துக் கொள்ளும் குடை நான்.
- காளான்.

34. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
- கரண்டி 

35. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
நாக்கு

36. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
- சீப்பு

37. கடலுக்குள் பூத்தது, கோயிலிலே முழங்குது.
- சங்கு 

38.  வீடு இரண்டு, பாதை ஒன்று.
- மூக்கு.

39. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
- நிலா

40. மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
- மஞ்சள்

41.  இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
- தேள்

42. ஒரு ஜான் பழத்தின் தோல் முழுக்க முட்கள் 
-  அண்ணாச்சி பழம்.

43. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும்.
- பூசணிக்காய்.

44. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள்.
 - புடலங்காய்.

45. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
- தலை முடி

46. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
- வெங்காயம்.

47. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
- கரும்பு

48. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
- விழுது

49. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பட்டாசு.

50. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
- பட்டாசு.No comments:

Post a Comment

Featured Post

Kadhalar Dina Kavithaigal 2020

Valentine's day Tamil kavithai | Kadhalar Dina Kavithaigal 2020 ஒருமுறை பிறந்தேன் உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு. ஒருமு...